ஊழலில் சிக்கிய கிரீன் பார்க் அவன்யூ தலைவர்... தட்டி கேட்ட பெண்ணுக்கு அடி உதை சேலத்தில் பயங்கர சம்பவம்.
சேலம் கிரீன் பார்க் அவன்யூ தலைவர் ஊழல்..
சேலம்:ஒரு ஊராட்சியில் வசித்து வரும் மக்களுக்கு தலைவராக செயல்பட்டு வருபவர்கள் தனது அதிகாரப்பவரை துஷ்பிரயோகம் செய்யாமல் மக்கள் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் மத்தியில் ஒரு முக்கிய மாவட்டத்தில் 200 வீடுகள் கொண்ட அப்பார்ட்மெண்டிற்கு சங்கத் தலைவராக இருந்து வரும் தாதா ஒருவர் மெயின்டனன்ஸ் என்ற பெயரில் கலெக்ஷன் செய்து பல லட்சங்களை முறைகேடு செய்து அராஜகம் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருவதாகவும்,அதை தட்டி கேட்ட பெண்ணை தகாத வார்த்தையில் பேசி அடித்ததாகவும் மன உளைச்சலில் தனது ஆதரவாளர்களுடன் கோர்ட்டு வாசலில் நீதிக்காக காத்திருக்கும் பல முக்கிய புள்ளிகள், அப்படி யார் அந்த தலைவர்? அவரைப் பற்றி பார்ப்போம்.
சேலம் மாவட்டம் புதிய பஸ் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உள்ளது இப்பகுதியில் 168 வீடுகள் அமைந்துள்ளது கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு கிரீன் பார்க் அவென்யூ வீட்டு உரிமையாளர் சங்கம் என பெயர் பதிவு செய்து செயல்பட்டு வந்துள்ளன, இச்சங்கத்தின் தலைவராக சுந்தர் செயலாளராக விநாயகமூர்த்தி பொருளாளராக சிவப்பிரசாத் போன்றவர்கள் கடந்த இரண்டு ஆண்டு காலமாக செயல்பட்டு வந்தன,
கிட்டத்தட்ட ஒரு வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் மாதம் வசூல் செய்து லிஃப்ட்டில் பயன்படுத்தும் மின்சாரம், பாதுகாவலருக்கு சம்பளம், போன்றவற்றை வழங்குவதாக கூறி இச்சங்கத்தின் சார்பில் தலைவர் சுந்தர் மாதம் கிட்டத்தட்ட மொத்தம் சுமார் 1.5 லட்சம் மேல் பெறப்பட்டு சம்பளம் வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார், இந்த மொத்த கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்க கூறி செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவில் கேள்வி எழுப்பி உள்ளனர் வீட்டு உரிமையாளர் பலர் கேள்வி கேட்கும் பொழுது தங்களுக்கு கூற முடியாது என தலைவர் சுந்தர் எதிர்ப்பு முனையாக பேசி முழப்பிச் சென்றுள்ளாராம், அதுமட்டுமல்லாமல் கிரீன் பார்க் அவென்யூ பகுதிக்கு உட்பட்ட இடத்தில் தேக்கு மரம் உள்ளது இதை யாருக்கும் தெரியாமல் தலைவர் சுந்தர் தலைமையில் ஆட்களை வைத்து வெட்டப்பட்டு விற்பனை செய்து வருவதாகவும் இவர் மேல் குற்றச்சாட்டு வைக்கின்றார்கள்
இந்த கணக்கு வழக்குகளின் மூலம் பல்வேறு முறை கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதேபோல் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் தொடர்ந்து இருந்து வருகின்றது இதைக் குறித்து 8.04.2024 அன்று கிரீன் பார்க் அவென்யூ பகுதியில் வசித்து வரும் சாய் சுந்தர், லட்சுமி செல்வம், லக்ஷ்மிபிரபா, ஆகியோர் அலுவலகத்திற்குச் சென்ற தலைவர் சுந்தரிடம் கணக்கு வழக்குகளை கேட்கும் பொழுது ஒரு கட்டத்தில் மேல் வாய் தகராறு ஏற்பட்டு தலைவர் சுந்தர், லட்சுமி மற்றும் சாய் சுந்தரை தாக்கியுள்ளார், அன்று தாக்கப்பட்டது சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்
மேலும் தாக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளான லட்சுமி தேசிய சீர்திருத்தம் இயக்கம் மற்றும் சேலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் தொடர்ந்து 17.4.2025 அன்று சேலம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இச்சங்கத்தில் எந்த ஒரு செயல்பாடும் பொதுக்குழு நடத்தி முன்னிலையில் சங்கம் செயல்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்து உள்ளார் ஓ.எஸ் நம்பர் 425/2025 பதிவாகியுள்ளது
குறிப்பு
இத்தகவல் குறித்து பாதிக்கப்பட்ட லட்சுமி ரிப்போர்ட்டர் செய்தி நிர்வாகத்திடம் முழு ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்துள்ளார்கள் தகவலின் அடிப்படையில் நிர்வாகம் சார்பில் சேலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கிரீன் பார்க் அவென்யூ தலைவராக செயல்பட்டு வந்த சுந்தரிடம் குற்றச்சாட்டு முறைகேடுகளை பற்றி கேட்கும் பொழுது, தங்கள் மேல் காழ்ப்புணர்ச்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்துவதாகவும் கூறி எதிராளிகள் ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் சொல்லி நீதிமன்றம் என்ன உத்தரவு போடுகிறார்களோ அதை பின்பற்றுவேன் என கூறி தொலைபேசி எண்ணை அனைத்து விட்டார் ...