சேலம் அருகே ஓடும் ரயிலில் ஜவுளிக்கடை உரிமையாளர் கைது ...பெண் சாப்ட்வேர் என்ஜினியரிடம் அத்துமீறல்..

Total Views : 72
Zoom In Zoom Out Read Later Print

ஈரோட்டை சேர்ந்த 24 வயதுடைய பெண் சாப்ட்வேர் என்ஜினியரிடம் ஒருவர் பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மும்பையில் இருந்து கோவை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி வந்துள்ளார். சேலம் அருகே வந்து கொண்டிருந்த போது ஓடும் ரயிலில் என்ஜினியரிடம் அத்துமீற முயன்ராம். இந்த புகாரில் ஜவுளிக்கடை உரிமையாளரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

சேலம்: ஈரோட்டை சேர்ந்த 24 வயதுடைய பெண் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 7ம் தேதி இரவு , பெங்களூரில் இருந்து ஈரோடு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து சொந்த ஊருக்கு செல்வதற்காக மும்பையில் இருந்து கோவை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

இந்த ரயில் நேற்று அதிகாலை சேலம் அருகே வந்து கொண்டிருந்தது. அதே பெட்டியில் பயணம் செய்த மர்ம நபர் ஒருவர் திடீரென தூங்கி கொண்டிருந்த அந்த பெண் என்ஜினியரிடம் சில்மிஷடத்தில் ஈடுபட்டு அத்துமீற முயன்றாராம். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டார். உடனே அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தார்கள்.

பின்னர் இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசாருக்கு உடனடியாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ரயில் அதிகாலை 4 மணியளவில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ஏற்கனவே அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீசார், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த 46 வயதாகும் சங்கர் என்பதும், சித்தூரில் ஜவுளிக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் துணிகள் வாங்குவதற்காக ஈரோட்டுக்கு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரெயிலில் பெண் என்ஜினியரிடம் சில்மிஷம் செய்த ஜவுளிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


See More

Latest Photos